RSS

Chapter 57 : Refraining from terrifying deeds

24 Jul
Investigating neutrally, and punishing appropriately,
so as to deter the repeat of a crime, is the duty of the king.
561
Raise the sceptre swift and stern, but land it softly,
those who wish never to lose what they possess.
562
A king will be isolated and will face rapid ruin,
if he becomes a tyrant indulging in terrifying deeds.
563
“My king – he is a tyrant” : such a denouncement
is certain to hasten a king’s downfall.
564
Inaccessible and has a harsh countenance – his huge wealth
resembles a treasure protected by demons.
565
If he is of harsh words, and has no compassion,
his extensive wealth will become extinct soon.
566
Harsh words and excessive punishments form the saw
that files away the king’s military might.
567
When the king doesn’t take counsel of his advisers,
and tends to explode with rage, his wealth starts imploding.
568
When the foes strike, a king who has not built his defences,
will fall swiftly, trembling with fear.
569
A tyrant will assemble an ensemble of the unlearned;
but for them, there is no burden for the earth.
570

——————————————————————————————————————————————————

அதிகாரம் 57 : வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.
561
கடித்தோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
562
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்த மொல்லைக் கெடும்.
563
இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி யொல்லைக் கெடும்.
564
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
565
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் னெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.
566
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரண்.
567
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகுந் திரு.
568
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
569
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.
570
 
2 Comments

Posted by on July 24, 2013 in Porul, Thirukkural

 

Tags: , , ,

2 responses to “Chapter 57 : Refraining from terrifying deeds

  1. Lakshminarayanan Viswanathan

    July 24, 2013 at 7:06 am

    Excellent work you are doing.Congrats.

     
    • Kannan

      July 24, 2013 at 11:18 am

      Thank you for your kind words, Lakshminarayanan.

       

Leave a comment