Oh foes, stand not facing my leader! Many have done so, and stand as stones. |
771 |
Better to bear the spear that missed the tusker than the arrow that got the rabbit. |
772 |
Great manliness lies in bellicose valor; grace towards ailing foes, adds steel to it. |
773 |
He spent his spear slaying an elephant, but breaks into a smile, plucking out the spear that pierces him. |
774 |
Doesn’t it equal defeat, blinking the eyes when a spear is thrown at him, the eyes that are staring the foe down. |
775 |
Count those as wasted days, the days when you didn’t earn a wound in a battle. |
776 |
The anklets of courage become ornate when they adorn those who spurn their lives seeking lasting fame. |
777 |
When a battle begins, the warriors who war without fear for life, do not let their vigour reduce even when the king restrains them. |
778 |
When he is ready to embrace death to fulfill his vow, who can taunt him for failure. |
779 |
If one overwhelms his patron with tears while dying for him, death deserves to be beseeched. |
780 |
அதிகாரம் 78: படைச்செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர். |
771 |
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. |
772 |
பேராண்மை என்ப தறுகணொன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. |
773 |
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். |
774 |
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. |
775 |
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. |
776 |
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. |
777 |
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்றல் இலர். |
778 |
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். |
779 |
புரந்தார்க்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து. |
780 |