If you ask, what torments more than poverty: Only poverty can torment more than poverty. |
1041 |
Poverty is a wretch; This life and the next does it snatch. |
1042 |
Ancestral legacy and parlance crumble in totality Due to hankering caused by poverty. |
1043 |
From the high-born too, vile words may be born When deprivation makes them so cast down. |
1044 |
From the one misery named penury Emanates many a worry. |
1045 |
After deep reflection they may say words of deep essence Yet what the poor say may be seen to have no sense. |
1046 |
Poverty aligned to no virtue makes even one’s mother Who bore bore him, to see him as a misfit. |
1047 |
Did not my privation kill me yesterday? Does it have to be back again today? |
1048 |
One may snatch a nap amidst raging fire But can not sleep a wink in poverty dire. |
1049 |
When want does not make one give up desire It spells doom for salt and sour gruel next door. |
1050 |
அதிகாரம் 105: நல்குரவு
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. |
1041 |
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். |
1042 |
தொல்வரவும் தோலுங் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை. |
1043 |
தொல்வரவும் தோலுங் கெடுக்கும் தொகையாக நல்குர வீனும் நசை. |
1043 V2 (வ.உ.சி) |
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும். |
1044 |
நல்குர வென்னும் இடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். |
1045 |
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். |
1046 |
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். |
1047 |
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. |
1048 |
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது. |
1049 |
துப்பர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்குங் காடிக்குங் கூற்று. |
1050 |
Srikanthan
February 6, 2018 at 3:02 pm
Mr. Kannan, in 1042, on the 2nd line – do we have 2 “and” !
Kannan
February 7, 2018 at 6:25 am
I’ve corrected it. Thank you.