A fortress is critical for those on the offensive; so is it, for those on the defensive to protect themselves. |
741 |
Pearl-like perennial water, sand, mountains and shaded woods – a strong fortress contains all these. |
742 |
Tall, vast, impregnable and unapproachable – experts prescribe these four measures for forts. |
743 |
Boundaries, vulnerable and needing protection, are minimal but area enclosed is vast – such a fortress destroys the confidence of advancing foes. |
744 |
A good fortress is unassailable, contains sufficient food and makes life easy for the residents. |
745 |
A strong fortress contains all required resources and valiant warriors who will support during a siege. |
746 |
Neither siege, nor an all-out attack, nor sowing dissent will befell a strong fortress. |
747 |
A strong fortress aids those devoted to stay and defend it, to defeat the formidable foes who have besieged it. |
748 |
A fortress attains glory through the glory attained by its residents, who, through their daring deeds, swiftly subdue the foes on the warfront. |
749 |
However formidable it maybe, a fortress is futile for those not formidable in their deeds. |
750 |
அதிகாரம் 75 : அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். |
741 |
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். |
742 |
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். |
743 |
சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். |
744 |
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண். |
745 |
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடைய தரண். |
746 |
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். |
747 |
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண். |
748 |
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். |
749 |
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண். |
750 |