Those who are well versed with the various ways of speech, will choose the right style for a forum, and won’t blunder out of fear. |
721 |
They are known the most learned amongst the learned, those who can express their learnings persuasively before a learned audience. |
722 |
Simple people, ready to die at the warfront, abound; those who fearlessly address an audience are a rare breed. |
723 |
Speak persuasively before the learned, what you have learnt, and absorb more from those who are more learned than you. |
724 |
Choose the right works and learn, knowing the limitations, so that you can debate fearlessly with any audience. |
725 |
What use is the sword to cowards? Of what use are books to those who fear a learned audience? |
726 |
A sharp sword in the hands of a coward before foes, is the scholarship of him who fears a forum. |
727 |
They may be of great learning but can serve no purpose if they shy away from speaking compellingly to a good audience. |
728 |
Though well learned, they’re considered worse than the ignorant, those who fear an assembly of good people. |
729 |
Out of stage-fright, those who can’t articulate their learnings well, maybe alive but are as good as lifeless. |
730 |
அதிகாரம் 73 : அவையஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். |
721 |
கற்றாருட் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். |
722 |
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர். |
723 |
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல். |
724 |
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு. |
725 |
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. |
726 |
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத் தஞ்சு மவன்கற்ற நூல். |
727 |
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தவர். |
728 |
கல்லாத தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார். |
729 |
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தவர். |
730 |