He who reads minds by observing, with no words spoken, is ever an adornment for the world with unchanging oceans. |
701 | |
Rate him amongst gods, he who can read minds with indubitable certainty. |
702 | |
Those who can read others’ minds by observing their own minds- if need be, give any of your organs to have them with you. |
703 | |
Those who can read minds based on gestures or expressions – if need be, give any of your organs to have them with you. |
703 | V2 |
Who can sense thoughts without being told, they are distinct, resembling others only in their human forms. |
704 | |
If one can’t observe and interpret body language, what purpose do eyes serve amongst the organs? |
705 | |
The face, like a crystal that shows the hues of objects around, betrays the mood of the mind. |
706 | |
What can be smarter than the face? It is quick to sense and show if the heart is pleased or peeved. |
707 | |
When those who can look into your heart and know your intentions, be with you, tasks will be accomplished if you just face them. |
708 | |
The eyes will convey the animosity or affinity to those who can decipher the subtleties of the eyes. |
709 | |
The scale used by the astute to gauge the emotions, if you think of it, is nothing but the eyes. |
710 |
அதிகாரம் 71 : குறிப்பறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. |
701 |
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். |
702 |
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். |
703 |
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போர் அனையரால் வேறு. |
704 |
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். |
705 |
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். |
706 |
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். |
707 |
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். |
708 |
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். |
709 |
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற. |
710 |